தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக கேட்கும் சீட்களை திமுக கொடுக்குமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விசிகவுக்கு அதிக சீட்களை கொடுத்தால், கூட்டணிக்குள் பிரச்னை வருமோ என திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் பயப்படுவதாக கூறியுள்ளார். ஆனால், இதற்காக விசிக அமைதியாக இருக்காது, எங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சீட்களை கேட்டுப்பெறுவோம் என உறுதியாக கூறியுள்ளார்.
