பாஜகவுடன் கூட்டணி வைத்து ஓட்டுக் கேட்கும் அதிமுகவின் செயல்பாட்டைத் திருமாவளவன் கடுமையாக விமர்சித்தார். “எந்தக் காலத்திலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது” என ஜெயலலிதா உறுதியாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கைகோர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். அதிமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் ஓங்கும் என்றும், ஈபிஎஸ்-ஐ ஓரங்கட்டிவிட்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதிமுகவை மெல்ல மெல்ல விழுங்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், இதைத் தடுத்து நிறுத்தவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையோடு ஸ்டாலின் செயல்படுவதால், அவருடன் தாம் ‘உடும்புப் பிடியாக’ நெருக்கமான உறவு வைத்துள்ளதற்குக் காரணம் இதுதான் என விளக்கமளித்தார்.
விஜய் உள்ளிட்ட மற்றவர்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்று அழைப்பு விடுத்தாலும், கொள்கை முடிவால் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக அவர் தெரிவித்தார். இந்தத் தேர்தல் என்பது வெறும் திமுக – அதிமுக இடையிலான போட்டி அல்ல; மாறாக இது பிற்போக்குச் சக்திகளுக்கும் முற்போக்குச் சக்திகளுக்கும் இடையே நடக்கும் ஒரு பெரும் போர் என்று தனது உரையில் திருமாவளவன் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…