வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் செய்யும்போது பலரும் கவனிக்காமல் விடும் முக்கிய விஷயம் வரி விலக்கு வருவாய் என்றால் விலக்கு அளிக்கப்பட்ட வருமானம் பற்றிய தகவல். அதை ITR இல் குறிப்பிடுவது கட்டாயம் . இது வரி தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும். விலக்கு வருமானம் பல பிரிவுகளில் வருகிறது.
விவசாய வருமானம் – பிரிவு 10 (1), வரி விலக்கு பாண்டில் வரும் வட்டி – பிரிவு 10 (15), சேமிப்பு வங்கி கணக்கில் ரூபாய் 10 ஆயிரம் வரை வட்டி-பிரிவு 80 TTA, உறவினர்களிடம் இருந்து கிடைக்கும் பரிசுகள் – பிரிவு 56 (2) இதுபோன்ற பல பிரிவுகள் உள்ளன, இதற்கு தனித்தனி வரம்புகள் உள்ளன.
உறவினர்களிடமிருந்து ரூபாய்.50,000 மேற்பட்ட பரிசுகள் வந்தால், அதற்கு வரி கட்ட வேண்டாம். எண்களில் முரண்பாடு இருந்தால் வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும். ஏதேனும் தவறு இருந்தால் கூடுதல் வரியும், வட்டியும் அபராதமாக விதிக்கப்படும். தவறுதலாக விடுபட்டால் அபராதம் ஏதுமில்லை, திட்டமிட்டு மறைத்தால், பின் நிரூபிக்கப்பட்டால் வரித்துறை தண்டனை நடவடிக்கை எடுக்கலாம். பிரிவு 270A கீழ் தவறான தகவல் கொடுத்ததற்காக அபராதம் விதிக்கப்படும்.
ITR தாக்கல் செய்யும்போது வரி விலக்கு என்றாலும் அனைத்து வருமானத்தையும் முழுமையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் வருமானத்தின் முழு படிவம் வரித்துறைக்கு சென்றடையும். ஆகவே , எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வரி தாக்கல் செய்யலாம்.
இந்தியாவில் மிக முக்கியமான ஆவணமான ஆதார் கார்டில் உள்ள தகவல்களைப் புதுப்பிப்பதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குறிப்பிட்ட…
சமையலறையில் பூண்டு வதக்கும்போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க புதினா இலைகள் சிறந்த தீர்வாகும். பூண்டில் உள்ள சல்பர் மூலக்கூறுகளை உடைக்கும்…
கோடைக்காலத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் முடி உதிர்வை அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வாக…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட நேரம் 'வார் ரூமில்' முகாமிட்டிருந்தது…
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மற்றும் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், மே 1, 2026 முதல்…
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் அல்லகட்டா பகுதியில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கணவனின்…