பாமகவுக்கு அடுத்த பேரதிர்ச்சி: “கோடிகளை கொட்டியும் புறக்கணிப்பா?”…. “அன்புமணிக்காக பிரச்சார காரே வாங்கி கொடுத்தேன்”…. தூக்கியெறிய முடிவெடுத்த திலகபாமா….!

Spread the love

பாமகவின் மாநிலப் பொருளாளரும், சிவகாசியைச் சேர்ந்த தொழில் அதிபருமான திலகபாமா, கட்சிப் பணிகளுக்காகத் தனது சொந்தப் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவிட்டு ஓடாய் உழைத்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், பாமகவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்களைக் கொண்ட மிகப்பெரிய குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், பாமக மீதான ஈடுபாட்டால் அக்கட்சியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றினார். அன்புமணி ராமதாஸின் பிரச்சாரத்திற்காகச் சொந்தச் செலவில் அதிநவீன வாகனத்தை வாங்கிக் கொடுத்தது முதல் கட்சி மாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிதும் தோள்கொடுத்தவர் திலகபாமா.

எனினும், இத்தனை தியாகங்களுக்கும் உழைப்பிற்கும் பாமக தலைமையிடமிருந்து அவருக்குக் கிடைத்தது ஏமாற்றமும் புறக்கணிப்பும் மட்டுமே. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், மாநிலத்தின் செல்வாக்கு மிக்க மூத்த தலைவரான ஐ. பெரியசாமியை எதிர்த்து ஆத்தூர் தொகுதியில் போட்டியிடக் கட்சித் தலைமை இவரைப் பணித்தது. வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும் எனத் தெரிந்தும், கட்சியின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அத்தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலிலும், நடிகர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் போன்ற கடினமான தொகுதியையே அவருக்கு ஒதுக்கீடு செய்து மீண்டும் சோதித்தது பாமக தலைமை.

வெற்றி வாய்ப்பற்ற தொகுதிகளைத் தொடர்ந்து திலகபாமாவுக்கு ஒதுக்கியதும், 10 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்று அவர் தோல்வியடைந்ததுமான சம்பவங்கள், அவரது குடும்பத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாமகவிற்காகப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவர் சந்தித்த பின்னடைவுகள், அவரது குடும்ப உறவுகளிலும் கசப்பை உருவாக்கின. இருந்தபோதிலும், ராமதாஸ் – அன்புமணி இடையிலான உட்கட்சிப் பூசல்களின் போது அன்புமணி பக்கம் உறுதியாக நின்று கட்சி பலம்பெறத் தொடர்ந்து உழைத்து வந்தார்.

தற்போது சௌமியா அன்புமணி போன்றோருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கட்சியின் மூத்த பொறுப்பிலிருக்கும் திலகபாமா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது அவருடைய ஆதரவாளர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை காலம் உண்மையாகவும் தீவிரமாகவும் உழைத்தும் தகுந்த அங்கீகாரம் கிடைக்காததால், அவரது குடும்பத்தினரின் அழுத்தமும் சேர்ந்துள்ள நிலையில், பாமகவின் ஆரம்பக்கால முதன்மைப் பெண் முகங்களில் ஒருவரான திலகபாமா விரைவில் பாமகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

3 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

3 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

4 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago