நாளந்தா: பேருந்து நிறுத்தத்தில் டீக்கடை ஒன்று இருந்தது. பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு குழந்தை அழுகுரல் கேட்டது. வெகு நேரமாக அந்த குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அந்த டீக்கடையின் உரிமையாளர் அந்த குழந்தையின் தாயிடம் கேட்டார் ஏன் குழந்தை அழுகிறது என்று. அதற்கு தந்தை குழந்தைக்கு பசிக்கிறது நாங்கள் வைத்திருந்த பால் தீர்ந்து விட்டது, கடையில் வாங்க எங்களிடம் காசு இல்லை என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அந்த டீக்கடைக்காரர் டீ போட வைத்திருந்த பாலை காய்த்து குழந்தைக்கு கொடுத்துள்ளார். குழந்தை பாலை குடித்தவுடன் அழுகையை நிறுத்தியது.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ராம்ஜி ஷா என்பவர் , பீகாரில் இருந்து தமிழ்நாட்டில் வேலை பார்ப்பதற்காக புறப்பட்டு உள்ளார். கூடவே மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையையும் கூட்டிச்செல்ல ராஜ்கீர் பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டு இருந்தார். அப்போது ராம்ஜி ஷாவின் குழந்தை பசியினால் அழுதது இதைப் பார்த்த டீக்கடைக்காரர் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். இந்த கதையின் ஹீரோதான் டீக்கடைக்காரர்.
இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு 1990 அன்றிலிருந்து பிறந்த குழந்தை முதல் 18 மாத குழந்தை வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக பால் விநியோகம் செய்கிறார். டீக்கடைக்காரரின் பெயர் ஷ்ரவன் குமார். இந்த மனிதநேயமிக்க மனித 2000ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். பின்பு அவரது சகோதரர் துன்னா பாபா என்கிற ரஞ்சித் குமார் டீக்கடையை எடுத்து நடத்தி வந்துள்ளார். அண்ணனைப் போலவே இவரும் இன்று வரை இலவசமாக குழந்தைகளுக்கு பால் கொடுத்து வருகிறார்.
இதைப் பற்றி ரஞ்சித் குமார் கூறுகையில். கடவுளின் வடிவம் தான் குழந்தைகள் அவர்களின் வயிற்றை ஆற்றுவதால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும். சாதாரண நாட்களில் சுமார் 4 லிட்டர் பால் விநியோகம் ஆகும். குளிர்காலத்தில் 10 லிட்டர் பால் விநியோகம் ஆகும். பெரியவர்களுக்கு உணவு எளிதாக கிடைக்கும் குழந்தைகளுக்கு அப்படி இல்லை. என் வாழ்க்கையில் இதை சேவை மனதுடன் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். உள்ளூர் மக்கள் இச்சேவையைப் பற்றி கூறியுள்ளனர். 365 நாட்களும் இலவசமாக குழந்தைகளுக்கு பால் கொடுக்கிறார். இந்தக் கடை இரவு 10 மணி வரைக்கும் திறந்திருக்கும்.
டெல்லி அருகே உள்ள வசுந்தராவில் வசித்து வந்த ஷஷாங்க் - பிரியா தம்பதியினர் தனியார் நிறுவனங்களில் கணக்காளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.…
ஆஸ்திரேலியாவில் இரண்டு பள்ளி மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் ஆசிரியை டெய்லா லீ பிரெய்லிக்கு 15 மாதங்கள்…
சென்னையில் கஞ்சா வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி ஒருவரைத் தந்தையின் கண்முன்னேயே தடுத்து நிறுத்தி வெட்டிக்கொலை செய்துவிட்டு,…
கோவையில் வெவ்வேறு விதமான இணையவழி மோசடிகளில் சிக்கி மூன்று நபர்கள் ஒரே நாளில் மொத்தம் ரூ.7.79 லட்சத்தை இழந்துள்ளனர். இது…
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ரமேஷ் நகர் பகுதியில் இளம்பெண் ஒருவரைச் சிலர் கொடூரமாகத் தாக்க முயன்ற பதைபதைக்கும் வீடியோ…
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த சேகர் – பிரேமா தம்பதியினர், பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளைச் சேகரித்து…