இந்த உலகில் விசித்திரமான விஷயங்கள் பல உள்ளது. அதேசமயம் மக்கள் பார்த்து வியக்கக்கூடிய அற்புதங்களும் நிறைய நிறைந்துள்ளது. அதனை நம்மில் ஒரு சிலர் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது. அப்படி நாம் அறிந்தவை ஒரு சில மட்டும்தான். நமக்கு தெரியாத விசித்திரங்கள் இந்த உலகில் நிறைய நிறைந்துள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள விசித்திரமான கிராமங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஷனி சிங்கநாபூர்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்த விசித்திரமான கிராமத்தில் வீடுகளுக்கு கதவே கிடையாதாம். மக்கள் இங்கே திருட்டு நடக்காது என்று முழுமையாக நம்புவதால் இங்கு வீடுகளுக்கு கதவு வைப்பதில்லை என கூறப்படுகிறது.
மீனாட்சிபுரம்:
தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த மீனாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் வேலை மற்றும் சூழல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஒரு ஆள் கூட இல்லாத கிராமமாக இந்த கிராமம் உள்ளது.
சிவகளை:
தமிழகத்தில் உள்ள இந்த கிராமத்தில் திருமணமான பிறகு மணமகன் மணமகளின் வீட்டுக்குச் சென்று வாழ்கின்றனர். பெண்களுக்கே இந்த கிராமத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
சேத்பால்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்த ஊரில் வீடுகளில் பாம்புகள் வசிப்பது தான் வழக்கமாக உள்ளது. பாம்புகள் இங்கு தெய்வமாக கருதப்படுவதால் சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாம்பை வளர்த்துக்கொண்டு செல்லப்பிராணி போல விளையாடுகின்றனர்.
ஏழு செம்பொன்:
தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மக்கள் யாருமே புகைப்பிடிக்க மாட்டார்களாம். கிராமத்தின் எல்லை வரை யாரையும் புகை பிடிக்கவும் அனுமதிக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
கொடின்ஹி:
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் இரட்டை குழந்தைகளின் கிராமம் என அழைக்கப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.
பார்வான் காலா:
பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கல்யாணமும் நடைபெறவில்லை. இளைஞர்கள் வேலைக்காக நகரங்கள் நோக்கி பயணிக்கின்றனர்.
கொங்க்தோங்:
மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் பெயருக்கு பதிலாக ஒலியின் வழியாக அழைக்கிறார்கள். ஒருவருக்கொருவர் தனி ஒலி அடையாளம் உண்டு.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…