“ஒரே ஆப்.. எல்லா அரசு வேலையும் உங்க பாக்கெட்டில்”… தமிழக அரசின் சூப்பர் பிளான்… உடனே டவுன்லோட் பண்ணுங்க…!

Spread the love

தமிழக அரசு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்காக ‘தேர்வுக்களம்’ (Thervukalam) எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிப்ரவரி 13, 2026 அன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தச் செயலியைத் தொடங்கி வைத்தார். அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை நனவாக்கும் ஒரு ‘கோல்டன் டிக்கெட்’ ஆக இது பார்க்கப்படுகிறது.

இந்தச் செயலியின் சிறப்பம்சமே, அனைத்து அரசுத் தேர்வு வாரியங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்ததுதான். டிஎன்பிஎஸ்சி (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) போன்ற மாநில அரசு அமைப்புகள் மட்டுமின்றி, மத்திய அரசின் SSC, RRB மற்றும் UPSC தேர்வுகளுக்கான தகவல்களையும் மாணவர்கள் இதில் உடனுக்குடன் பெற முடியும். ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக இணையதளங்களைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இருக்காது.

புதிய காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் போது உடனடியாக ‘அலர்ட்’ வருவதுடன், விண்ணப்பம் செய்வது முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் மற்றும் தேர்வு முடிவுகள் வரை அனைத்தையும் இந்த ஒரு செயலியிலேயே முடித்துக்கொள்ளலாம். இது மாணவர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலைக் குறைத்து, தேர்வில் அதிக கவனம் செலுத்த வழிவகை செய்கிறது. அறிவிப்புகளுடன் மட்டும் நின்றுவிடாமல், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள் மற்றும் தரமான பாடக்குறிப்புகளையும் இந்தச் செயலி இலவசமாக வழங்குகிறது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரசு வேலை தேடும் இளைஞர்களுக்குப் பேருதவி புரியும் இந்த முயற்சியை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மாதிரித் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அரசு வேலை எனும் இலக்கை அடையத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞரின் கைபேசியிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான கருவியாக ‘தேர்வுக்களம்’ உருவெடுத்துள்ளது.

Nanthini

Recent Posts

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

4 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

16 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

18 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

22 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

24 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

25 minutes ago