உலகளவில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகத் திகழும் தாய்லாந்து மற்றும் அதன் தலைநகரான பேங்காக் நகருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு தாய்லாந்து அரசு அதிர்ச்சியளிக்கும் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் பெற்று வந்த ‘விசா இல்லா நுழைவு’ சலுகையை தாய்லாந்து அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, இந்தியப் பயணிகள் இனி ‘வருகை விசா’ பிரிவின் கீழ் மட்டுமே தாய்லாந்து நாட்டிற்குள் நுழைய முடியும். இந்த விசாவைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாக, பயணிகள் தங்களது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான EVOA வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அங்கு உரிய படிவத்தை சமர்ப்பித்து, 2000 THB (தாய்லாந்து பாட்) விசா கட்டணம் மற்றும் செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்தி ஒப்புதல் பெற்றுக்கொண்டால், விமான நிலையத்தை அடைந்தவுடன் பிரத்யேகப் பாதை வழியாக விரைவாக வெளியேற முடியும்.
இரண்டாவது வழிமுறையாக, தாய்லாந்து விமான நிலையத்தை அடைந்த பிறகு அங்குள்ள பிரத்யேக கவுண்டர்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அங்குள்ள படிவத்தை நிரப்பி, அதனுடன் பாஸ்போர்ட், புகைப்படம், திரும்பும் விமான டிக்கெட் மற்றும் தங்குமிட விவரங்களைச் சமர்ப்பித்து விசா கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதிகாரிகளால் இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு, சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் 15 நாட்கள் வரை தங்குவதற்கான விசா முத்திரை (Visa Stamp) வழங்கப்படும்.
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…