உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பாஜக பெண் தலைவர் ரிச்சா சுக்லாவின் வீட்டில், நள்ளிரவில் புகுந்த திருடன் ஒருவன் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் செல்போன்களைத் திருடிச் சென்ற துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், திருடன் ஒருவன் வீட்டின் சுற்றுச்சுவரை மிக லாவகமாக ஏறிக்குதித்து, உள்ளே பெண்கள் தூங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களைத் திருடிச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இரண்டு இளம் பெண்கள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள்ளேயே திருடன் புகுந்திருப்பது, கான்பூர் மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் நகை, பணம் திருடுபோனதை விட, அங்குள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளே தற்போதைய முக்கிய விவாதமாக மாறியுள்ளன. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும், பல மணி நேரங்கள் கழித்தே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகப் பாதிக்கப்பட்ட ரிச்சா சுக்லா குற்றம் சாட்டியுள்ளார். “உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் வலுவாக உள்ளது; பெண்கள் நள்ளிரவிலும் தங்கம், வைரம் அணிந்து கொண்டு பயமின்றி வீதிகளில் நடமாடலாம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த காலங்களில் பெருமையுடன் பேசியதைச் சுட்டிக்காட்டி, தற்போது எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் யோகி ஆதித்யநாத் அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…