தாயின் கழுத்தை அறுத்த வாலிபர்கள்… “நேரில் பார்த்த 12 வயது மகளையும் துடிதுடிக்க….” காரணம் என்ன…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் யாசின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி எல்லம்மாள். இந்த தம்பதியினருக்கு பெரியசாமி என்ற மகனும் இரட்டையர்களான சுசிதா, சுசிகா என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் சுரேஷ் உயிரிழந்த நிலையில் ஒரு சில மாதங்களில் சுசிகா விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் 10-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் பெரியசாமி, 7-ஆம்  வகுப்பு படிக்கும் சுசிதா ஆகியோருடன் எல்லம்மாள் வாழ்ந்து வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த சுசிதா தனது தாயுடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மாலை 5 மணிக்கு எல்லம்மாளின் தம்பி மனைவி கிரிஜா வீட்டிற்குள் சென்று பார்த்த போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தாயும், மகளும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது வேன் ஓட்டுனரான  நவீன் குமார் என்பவர் யாசின் நகரை சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நவீன் குமாரின் நண்பரான சத்யராஜ் என்பவருக்கு பணம் தேவைப்பட்டது.

இதனால் நவீன் குமார் தனது மனைவி பிரியங்காவின் தம்பி சந்தோஷ் மூலம் வட்டிக்கு பணம் கொடுக்கும் எல்லம்மாளின் வீட்டிற்கு சென்று பைக் ஆவணங்களை அடமானமாக வைத்து பத்தாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அந்த கடனுக்கு வாரத்திற்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என நிபந்தனையுடன் 9 ரூபாய் பணத்தை எல்லம்மாள் நவீன் குமாரிடம் கொடுத்துள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே வட்டி கொடுத்துள்ளனர்.

அதன்பிறகு பணத்தை தராததால் எல்லம்மாள் நவீன் குமாரையும் சத்யராஜையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மீதமுள்ள 7 ஆயிரம் ரூபாயை தருமாறு மிரட்டியுள்ளார். சம்பவம் நடந்த அன்று நவீன் குமாரும் சத்யராஜும் வீட்டிற்கு சென்றபோது எல்லம்மாள் பணத்தை கொடுக்க துப்பில்லை. நீ எல்லாம் எதற்கு வாழ்கிறாய்? எங்காவது போய் சாக வேண்டியதுதானே என பேசி உள்ளார்.

இதனால் அங்கிருந்து சென்ற நவீன் குமாரும் சத்யராஜும் தங்களது நண்பரான ஹரிஷ் என்பவருடன் இணைந்து எல்லம்மாளின் வீட்டிற்கு சென்று அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மகளையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள், பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நவீன் குமார், சத்யராஜ், ஹரீஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

4 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

4 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

5 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

5 மணத்தியாலங்கள் ago