பெங்களூரு சுங்கதகட்டே பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வினோத் (27) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2-ம் தேதி அந்தப் பெண் தனது வாகனத்தில் சென்றபோது, சாலையில் இருந்த பள்ளம் காரணமாக வேகத்தைக் குறைத்துள்ளார்; அந்தச் சமயம் அருகில் ஓடி வந்த வினோத், அப்பெண்ணுக்குத் தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்துவிட்டுத் தப்பியோடினார்.
பின்னாலேயே காரில் வந்த அப்பெண்ணின் கணவர் வினோத்தைப் பிடிக்க முயன்றும் அவர் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஹீரோஹள்ளியைச் சேர்ந்த வினோத்தை போலீசார் அடையாளம் கண்டனர்.
விசாரணையில், வினோத் திட்டமிட்டே எண் பலகை (Number Plate) இல்லாத வாகனத்தைப் பயன்படுத்தி, சாலையில் தனியாக அல்லது மெதுவாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்துத் தொடர்ந்து இது போன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. காமாட்சிபாளையம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூரில் அரங்கேறிய இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…