தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழக அரசின் சார்பில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முறைப்படி நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளார். பதவியேற்பின் போதே, “முந்தைய திமுக அரசின் செயல்பாடுகள், மாநிலத்தின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை மற்றும் தற்போதைய கஜானாவின் உண்மை நிலை ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்; எனவே தமிழகத்தின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என அவர் உறுதியளித்திருந்தார். அவர் அறிவித்து ஒரு மாதம் கடந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களின் முடிவில், இன்று மாலை 5.30 மணிக்கு தமிழகத்தின் நிதிநிலை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கை வெளியாகிறது.
நாளை மறுநாள் தமிழக சட்டசபை கூடவுள்ள சூழலில், இன்றைய தினம் இந்த முக்கிய அறிக்கையை மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிடவிருக்கிறார். துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான செலவினங்கள் மற்றும் இழப்பீடுகள், முடங்கிப் போயிருக்கும் திட்டங்கள், மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் விபரம் மற்றும் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நிதி உள்ளிட்ட அனைத்து முக்கியத் தரவுகளும் இந்த வெள்ளை அறிக்கையில் விரிவாக இடம்பெறவுள்ளன. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறையைச் சீரமைத்து, தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகளைத் திறம்படச் செயல்படுத்துவதற்கான ஒரு முக்கியத் தொடக்கமாக இந்த அறிக்கை பார்க்கப்படுகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…