பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக களம் இறங்கிய ஜோவிகாவிற்கும், விசித்திராவுக்கும் இடையே படிப்பு குறித்து மோதல் நிலவியது. இந்நிலையில் படிப்பு என்பது அவசியமா இல்லையா என்பது குறித்து ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே சண்டை வந்தது. படிப்பு எனக்கு வரல நான் கஷ்டப்பட்டேன் அதனால நிப்பாட்டிட்டேன் என ஜோவிகா கூறியுள்ளார். அதற்கு விசித்ரா அடிப்படை கல்வி என்பது மிகவும் அவசியம். என்னோட பசங்களும் சுமாரா படிக்கிறவங்க தான். அதுக்கப்புறம் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எதையும் நான் தவறாக சொல்லவில்லை.
நமது பெற்றோர் தேவையான கல்வியை கொடுக்க தயாராக இருக்கும்போது படிக்காவிட்டால் எப்படி என்ற நல்ல எண்ணத்தில் தான் பேசினேன் என விசித்திரா கூறினார். அதற்கு ஜோவிகா கல்வி மற்றும் பொது அறிவு முக்கியம் தான். நீட் பிரச்சனையால் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். படிப்பு என்கிற விஷயத்தில் தற்கொலை, தவறான பாதையில் போறாங்க. அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இங்கு வந்தேன் என பேசினார். இருவருக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் ஜோவிகா.. எப்பயாவது கல்வி முக்கியம் இல்ல அப்படின்னு சொல்லி இருக்கீங்களா? விசித்ராவின் இன்டென்ஷன் தப்பு இல்ல. ஜெனரேஷன் இடைவெளி தான். வரலன்னா விட்ரனும் உயிர் கொடுத்தாவது கல்வி முக்கியம் இல்லன்னு சொல்றவங்க நாங்க. குறைகளை சொல்லும் போது ஏற்றுக்கொள்கிற மனப்பான்மை பலருக்கும் இருக்காது. கற்றல் விதி இருக்கலாம். கற்றல் வதை இருக்கக் கூடாது என கமல்ஹாசன் பேசியுள்ளார்.
இந்நிலையில் கல்வி குறித்து அஜித் கூறிய வீடியோவை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில் எல்லாரும் கண்டிப்பா படிங்க. நான் பத்தாங்கிளாஸ் தான். படிப்பு அறிவு; பட்டறிவு என்பது உண்டு. பட்டறிவு என்பது மிகவும் கடினம். இப்ப நான் feel பண்றேன் ஏன் படிக்காமல் விட்டு விட்டோம் என்று. ரொம்ப கஷ்டப்பட்டு வளர வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. இப்போ பீல் பண்றேன் ஒருவேளை படிச்சி இருக்கலாம் அப்படின்னு என அஜித் கூறுகிறார். அந்த வீடியோ இதோ..
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…