உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற சுவாரசியமான காதல் சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது மேற்கத்திய பாணியில் இளைஞர் ஒருவர், வணிக வளாகத்தின் நடுவே தனது காதலி முன் முழங்காலிட்டு மோதிரத்தை நீட்டித் திருமணக் கோரிக்கையை (Proposal) முன்வைத்தார். அந்த இளம்பெண் ஆச்சரியத்துடன் தனது சம்மதத்தைத் தெரிவித்ததோடு, இருவரும் கட்டிப்பிடித்துத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
காதலை ஏற்றுக்கொண்ட சில நிமிடங்களிலேயே, அந்த இளைஞர் அப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் (சிந்தூர்) இட்டார். இது இந்து பாரம்பரிய திருமணத்தின் மிக முக்கியச் சடங்காகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர் அப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். ஒரு திரையரங்கக் காட்சி போல பொது இடத்திலேயே இந்தத் திருமணம் நடைபெற்றது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சுற்றியிருந்த பொதுமக்கள் இந்தத் தருணத்தைக் கைதட்டி ரசித்ததுடன், தங்கள் அலைபேசிகளில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை (மே 4) வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.…
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில், பழுதடைந்த தண்ணீர் தொட்டியின் உச்சியில் 15 மணி நேரம் உயிருக்காகப் போராடிய இரண்டு சிறுவர்களை…
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…