தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் நிலவி வரும் நிர்வாகத் தாமதங்களைக் குறைக்கவும், சாலைப் பணிகளை விரைவுபடுத்தவும் ஒரு முக்கிய சீர்திருத்தத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதுவரை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள், திட்டங்கள் மற்றும் சென்னை சிட்டி சாலைகள் என தனித்தனிப் பிரிவுகளாக இயங்கி வந்த துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இனி சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நான்கு மண்டலங்களாகச் செயல்பட உள்ளன.
இந்த மாற்றத்தின் மூலம், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தலைமைப் பொறியாளர் நியமிக்கப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் அனைத்து விதமான சாலை மற்றும் மேம்பாலப் பணிகளும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
இந்த புதிய அதிகாரப் பரவலாக்கல் முறையினால், நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப அனுமதிகளுக்காகச் சென்னை தலைமைச் செயலகத்தைச் சார்ந்திருக்கும் நிலை குறைந்து, மண்டல அளவிலேயே விரைவான முடிவுகள் எடுக்கப்படும்.
இது குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலை அமைக்கும் ஒரு பிரிவிற்கும், அதே இடத்தில் பாலம் கட்டும் மற்றொரு பிரிவிற்கும் இடையே நிலவி வந்த ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் மற்றும் ‘சிவப்பு நாடா’ முறை இதன் மூலம் தவிர்க்கப்படும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச்சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் இனி எவ்விதத் தடையுமின்றி ‘ஜெட்’ வேகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…