நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்ட வந்தே பாரத் ரயில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மதுபோதையில் மயங்கிக் கிடந்த ரயில்வே கேட் கீப்பர்களால் நடுவழியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் புறப்படுவதற்கு முன்பாக நிலைய மேலாளர் நாங்குநேரி கேட் கீப்பரைத் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மற்ற ஊழியர்கள் நேரில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த இரண்டு கேட் கீப்பர்களும் பணியின் போது மது அருந்திவிட்டு சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதி வள்ளியூர் அருகே வந்தே பாரத் ரயில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தக் கடுமையான விதிமீறல் தொடர்பாக ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஊழியர்கள் மது அருந்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பணியில் கவனக்குறைவாகவும் மதுபோதையிலும் இருந்த கொம்பையா மற்றும் சிராவன் ஆகிய இரு ஊழியர்களையும் நாகர்கோவில் ரயில்வே பொறியாளர் பிரிவு அதிகாரி உடனடியாகப் பணியிடை நீக்கம செய்து உத்தரவிட்டார். அதிவேக ரயில்கள் இயக்கப்படும் பாதையில் இத்தகைய அலட்சியம் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அவர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி. சௌத்ரி, நடிகர் விஜய்யின் ஆரம்பகால வளர்சியில்…
பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ஜெஹானாபாத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சர்மா என்ற இளைஞர் சந்தேகத்திற்கிடமான…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழக காங்கிரஸ்…
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் நூதன முறையில் திருமண மோசடி செய்து வந்த ஒரு பெண் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஏற்கனவே…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சிபிஎம் (CPM) கட்சி திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்பதாக அக்கட்சியின்…