2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற முக்கிய கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இந்த முறை கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. சமீபத்தில் தேர்தல் ஆணையத்தின் மாநில அங்கீகாரத்தை பெற்ற விடுதலை சிறுத்தைகள் தங்களின் வளர்ச்சியை நிரூபிக்க இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு வருகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 12 முதல் 15 இடங்கள் வரை எதிர்ப்பார்க்கின்றது. அதிலும் குறிப்பாக பொது தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு அக்கட்சி ஆர்வம் காட்டி வருகின்றது.
இடது சாரி கட்சிகளைப் பொறுத்தவரையில் கடந்த தேர்தலில் தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. நடிகர் விஜயின் அரசியல் வருகை மற்றும் காங்கிரஸின் 40 தொகுதிகள் கோரிக்கை போன்ற பல காரணங்களால் திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்துவதில் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகின்றது. இருந்தாலும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் கூட்டணி கட்சிகள் திமுகவுடன் இணைந்திருக்க விரும்புகின்றன. இருந்தாலும் கூட்டணி தொடர்பான சிக்கல் நீடித்து வருவதால் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலி நீடித்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…