ஆன்லைன் வர்த்தகம் மக்களின் அன்றாடத் தேவைகளை எளிதாக்கியுள்ள போதிலும், சில நேரங்களில் அது பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலையும் விபரீத அனுபவங்களையும் ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில், பூஜா ஜோஷி என்ற பெண் ஆன்லைன் மூலம் பாலியல் சார்ந்த பொருள் (செக்ஸ் பொம்மை) ஒன்றை ஆர்டர் செய்தபோது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை லிங்க்டுஇன் தளத்தில் பகிர்ந்துள்ளார். பார்சலை டெலிவரி செய்ய வந்த நபர் தன்னை ஒரு மாதிரி உற்று நோக்கியதாகவும், அவர் சென்ற பிறகு பார்சலைப் பார்த்தபோது அது பிரிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் பூஜா குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சி இத்துடன் முடிவடையாமல், அந்த டெலிவரி நபர் பூஜாவைத் தொலைபேசியில் அழைத்து, “இதையெல்லாம் ஏன் பயன்படுத்துகிறீர்கள்? என்னை விபச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், மஜாவாக இருக்கும்” என்று பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசியுள்ளார். இதனால் நிலைகுலைந்த பூஜா, உடனே உஷாராகி உயரதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். பயந்துபோன அந்த நபர் மன்னிப்பு கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தாலும், அந்தத் தருணத்தில் தனக்கு ஏற்பட்ட அச்சமும் அத்துமீறலும் ஒரு சாதாரண மன்னிப்பால் மறைந்துவிடாது என்று பூஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனம் பூஜாவின் பெயரை குறிப்பிட்டு அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், அந்த டெலிவரி நபரை பணியில் இருந்தும் நீக்கியுள்ளது. இச்சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களையும், பூஜாவுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் தன் தனிப்பட்ட விருப்பத்திற்காகப் பாலியல் சார்ந்த பொருளை வாங்குகிறார் என்பதற்காக, அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த யாருக்கும் உரிமையில்லை என்றும், அவர் எதிர்கொண்டது மிகவும் பயங்கரமான அனுபவம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…
இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மதர் டெய்ரி, சுமார் 4 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பின்னர்,…
திருமணமான முதல் இரவே போர்க்களமாக மாறிய ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அறையில்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான வீடியோவில், ஒரு மாந்தோட்டத்தின் அருகே இரயில் ஒன்று தற்காலிகமாக நின்று கொண்டிருக்கிறது.…
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…