“நேரில் வா பேசிக்கலாம்”.. நம்பி வந்த காதலிக்கு நேர்ந்த விபரீதம்… காதலன் கொடூர செயல்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவரும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த சில காலமாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். திருச்சியில் உள்ள பிரபல ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அந்த வாலிபர், தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். அவரை காதலித்து வந்த இளம் பெண், திருச்சியின் காஜாமலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று வரும் மாணவியாவார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவரவே, மாணவியின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பெற்றோர்கள் அந்த மாணவிக்கு வேறு ஒரு இடத்தில திருமணம் செய்யத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இந்த விபரத்தைத் தொலைபேசி வாயிலாக அந்த மாணவி தனது காதலனிடம் கூறி வருந்தியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், அவசரப்பட்டு இப்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். அதன்படி, திருச்சியில் உள்ள ஒரு பூங்காவிற்கு வருமாறு காதலிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். காதலனின் வார்த்தையை நம்பி அந்த மாணவியும் நேரில் பேசுவதற்காகக் குறிப்பிட்ட அந்தப் பூங்காவிற்கு வந்துள்ளார்.

பூங்காவில் அமர்ந்து இருவரும் தங்களது காதல் குறித்தும், வீட்டின் எதிர்ப்பு மற்றும் மாற்றுத் திருமணம் குறித்தும் நீண்ட நேரமாகப் பேசியுள்ளனர். இந்த விவாதத்தின் போது, காதலி தனது பேச்சுக்கு உடன்பட மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன், அவளைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். அடி தாங்க முடியாமல் மாணவி கீழே விழுந்த நிலையிலும், வெறித்தனம் அடங்காத வாலிபர் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவளது முகத்திலேயே கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் முகம் சிதைந்து பலத்த காயமடைந்த மாணவி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதனைப் பார்த்த பூங்காவில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அந்த வாலிபரைத் தடுத்து நிறுத்தி மாணவியை மீட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த மாணவியை அவசரமாக அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற காதலனை பொதுமக்கள் துரத்திப் பிடித்து, தர்மஅடி கொடுத்து, அவரது கைகளைக் கயிறுகளால் கட்டிப் போட்டனர். இதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாலிபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

BREAKING: பெண் குழந்தைக்கு ரூ.50000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2026 - 27-ம் நிதியாண்டிற்குப் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு…

30 seconds ago

“சேகர்பாபுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியின் துணைத் தலைவரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன், அக்கட்சியின் தலைமைக்கு சமூக…

6 minutes ago

BIG BREAKING: அடுத்த 6 மாதங்களில் விஜய் ஆட்சி கவிழும்… தனபால் MP பரபரப்பு பேட்டி..!!

அடுத்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி கவிழும் என்று அதிமுக-வைச் சேர்ந்த தனபால் MP அதிரடியாகவும் பரபரப்பாகவும்…

27 minutes ago

நள்ளிரவில் வீடுபுகுந்து… செய்தியாளரை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்.. தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனைக்கு எதிராகத் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன்,…

30 minutes ago

EPS எங்களை கூப்பிடுறாரு.. ஆனா இன்னொரு பக்கம் என்ன நடக்குது தெரியுமா..? போட்டுடைத்த சிவி சண்முகம்…!!

அதிமுகவின் தொடர் படுதோல்விகளுக்கு அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தான் முழு முதற்காரணம் என்று கட்சியின்…

42 minutes ago