“சீட் இல்லாவிட்டாலும் வருத்தப்படக்கூடாது” தேர்தல் களத்தில் தவெக-வின் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ்..!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (பிப். 10) மாலை 4 மணிக்குக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாகத் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவதாகவும், பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் எக்காரணம் கொண்டும் வருத்தப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். அறிவிக்கப்படும் வேட்பாளர்களுக்குத் தவெக நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை அவர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

தேர்தல் களப்பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 5 தேர்தல் பணிமனைகளை அமைக்க வேண்டும் என அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் செல்வாக்கை வாக்குகளாக மாற்றும் வகையில் அடிமட்ட அளவில் பணிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு நிர்வாகிகள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
Soundarya

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

4 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

4 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

5 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

5 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

5 மணத்தியாலங்கள் ago