தங்கச் சுரங்கங்களில் தங்கம் கிடைக்கும் அளவு தொடர்ந்து குறைந்து வருவது உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் நிலப்பரப்பிற்கு அருகிலேயே எளிதாகக் கிடைத்த தங்கம், தற்போது தீர்ந்து வரும் நிலையில், புதிய தங்கத்தைத் தேடி பூமிக்கு அடியில் சுமார் 4 கிலோமீட்டர் ஆழம் வரை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முக்கிய சுரங்கங்களில் உற்பத்தி பாதியாகக் குறைந்துள்ளதால், தங்கம் எடுப்பதற்கான செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆய்வுகளின்படி, இன்னும் 20 முதல் 25 ஆண்டுகளில் பூமியில் தோண்டி எடுக்கக்கூடிய நிலையில் உள்ள தங்கம் முழுமையாகத் தீர்ந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால், சந்தையில் புதிய தங்கத்தின் வரத்து குறைந்து, அதன் விலை நாம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு ராக்கெட் வேகத்தில் உயரும் அபாயம் உள்ளது. ஆண்டுக்குச் சுமார் 3,600 டன்கள் தங்கம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், பூமியில் எஞ்சியிருப்பது வெறும் 54,000 டன்கள் மட்டுமே எனக் கூறப்படுகிறது.
இதனால் 2050-ஆம் ஆண்டிற்குள் புதிய தங்கம் எடுப்பது என்பது மிக அரிதான ஒன்றாக மாறிவிடும் என்பதால், தங்கம் இனி ஒரு சாதாரண முதலீடாக இல்லாமல், எட்டாக்கனியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. சுரங்கங்களின் இந்தத் தட்டுப்பாடு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்காலத்தில் தங்கத்தின் மதிப்பை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்லும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…