காதெல்லாம் ஒரே ரத்தம்… வீங்கிய முகத்தோடு இருந்த மகன்… ஆசிரியர் செய்த கொடூரத்தால் கதறிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டாவில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 10 வயது மாணவர் ஒருவரை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவன், சமூக வலைதளத்தில் பள்ளி தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒரு போலிப் பக்கத்தை லைக் செய்து பகிர்ந்துள்ளார். இந்தச் சிறு தவறுக்காக ஆசிரியர் ஒருவர் அந்த மாணவரை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்தக் கொடூரமான தாக்குதலில் சிறுவனின் காதுப் பகுதி பலத்த காயமடைந்து ரத்தம் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி, மதிப்பெண்கள் குறைக்கப்படும் என மிரட்டப்பட்ட சிறுவன், நாள் முழுவதும் வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டுள்ளான். பள்ளி முடிந்து மகனை அழைக்க வந்த தந்தை, காயங்களுடன் இருந்த மகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆசிரியரின் இந்த மனிதநேயமற்ற செயல் குறித்து மாணவனின் தந்தை ஈட்டா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியரே இத்தகைய வன்முறையில் ஈடுபட்டது சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Soundarya

Recent Posts

சல்யூட் சார்..! பாதுகாவலரைத் தாக்கிய தேனீக்கள்… நிபுணர்களே அஞ்சிய வேலையை துணிச்சலுடன் முடித்த கல்லூரி முதல்வர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…

4 minutes ago

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

12 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

13 minutes ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

22 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

25 minutes ago