2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில் தனித்து களம் கண்டு 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் (விசிக), ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்குப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டது. ஆனால், அண்மைக்காலமாக விசிக தலைவர் திருமாவளவன் “தவெக அரசில் அங்கம் வகிக்கிறோம்” என்று கூறிவிட்டு, மறுபுறம் “திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்” என மாறி மாறிப் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் அரசியல் திருப்பங்களுக்குப் பின்னால் விசிகவின் அடுக்கடுக்கான கோரிக்கைகளும், அதனால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுமே முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது. திருமாவளவனைத் துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற விசிக மாவட்ட நிர்வாகிகளின் தீர்மானம், முக்கியத் துறைகளின் ஒதுக்கீடு, வாரியத் தலைவர் பதவிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் மூன்று மேயர் இடங்கள் போன்ற விசிகவின் தொடர் கோரிக்கைகளால் தவெக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. ‘இரண்டு பக்கமும் துண்டு போடும்’ விசிகவின் இந்த இரட்டை நிலைப்பாடும், பனையூர் வட்டாரத்தின் அதிருப்தியும் தவெக கூட்டணியில் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.
விசிகவின் இந்த நெருக்கடிக்கு மத்தியில், தவெக அரசுக்கு ஆதரவளிக்க பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் காவிரி விவகாரத்தில் தவெகவின் முடிவுகளுக்குப் பாமக ஆதரவு தெரிவித்தது என இரு கட்சிகளுக்கும் இடையேயான இணக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாமக எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் அவர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதனால், விசிக தொடர்ந்து தவெகவிற்கு நெருக்கடி கொடுத்தால், அதற்கு மாற்றாக தவெக – பாமக கூட்டணி அமைவது உறுதி என்ற பேச்சுக்கள் தற்போதைய தமிழக அரசியலில் பலமாக அடிபடுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், தன் மனைவி தார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால், கணவனே மனைவியை…
மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது, சார்ஜ் போடப்பட்டிருந்த பவர் பேங்க்…
துருக்கி நாட்டின் அர்னவுத்கோய் பகுதியில், சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் பயங்கரமாக…
பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கல்வித் துறைக்கான நிதி குறைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போதிய உள்கட்டமைப்பு…
சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், சிறுமி ஒருவரை நோக்கிப் பாய்ந்து வந்த நாய் தாக்குதல் நடத்த முயன்ற போது,…