பாரசீக மொழியில் அரண்மனைகளின் கிரீடம் என்று பொருள்படும் தாஜ்மஹால் வட இந்தியாவில் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. கடந்த 1632 ஆம் ஆண்டில் பேரரசர் ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜ் மஹாலுக்கு ஒரு கல்லறை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அதனால் தாஜ்மஹாலை கட்டினார். தாஜ்மஹாலில் மனைவியின் கல்லறை மற்றும் ஒரு மசூதி மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளது. இது விலைமதிப்பற்ற மற்றும் விலை உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குர்ஆனின் வரிகள் இந்த சுவர்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
20,000 மேற்பட்ட தொழிலாளர்கள் இதைக் கட்டியதாகவும் கட்டுமானத்தின் போது கனமான பொருட்களைக் கொண்டு செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. கட்டிடக்கலையில் ஆர்வம் கொண்ட ஷாஜகான் தன் மனைவிக்காக கட்டப் போகும் கட்டிடம் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்பதற்காக உலக அளவில் கைதேர்ந்த கட்டிடக்கலை வடிவமைப்பாளர்களை வரவழைத்து தாஜ்மஹாலின் மாதிரி வரைபடத்தை வரைந்தார். இந்த கட்டிடத்தின் வேலைகள் 1632 ஆம் ஆண்டு தொடங்கி 1648 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மேலும் தாஜ்மஹாலில் மிகப்பெரிய மர்மமாக ரகசிய அறை ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த அறை உண்மையில் உள்ளதா என்பதை இன்றுவரை யாருக்குமே தெரியவில்லை. ஒரு தனி மனிதனின் அளவு கடந்த காதல் எந்த அளவிற்கு வலிமையானது என்பதை இந்த தாஜ்மஹால் நமக்கு உணர்த்துகின்றது. தாஜ்மஹாலின் சிற்பக்கலை உலகம் முழுவதும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றது. ஆனால் பாதுகாப்பிற்காக ஷாஜகான் மற்றும் மும்தாஜ் ஆகியோரின் கல்லறையை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை செய்யப்பட்ட பகுதியை வீடியோ எடுத்து ஒருவர் வெளியிட்டுள்ள நிலையில் கல்லறையின் அழகை பார்த்து நெட்டிசன்கள் வியந்து போய் உள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…