Categories: சினிமா

வில்லன் இல்லாமல் சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் படங்கள் என்னன்னு தெரியுமா?…

Spread the love

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் ஏராளம் அதிலும் வில்லன் இல்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களைப் பற்றி இதில் காண்போம்.

1.குஷி:
இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘குஷி’. இப்படத்தில் விஜய், ஜோதிகா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் முழுவதும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். காதலால்  காதலர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றிய ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.  இந்த திரைப்படம் வில்லன் என்னும் கதாபாத்திரம் ஒன்று இல்லாமலேயே இப்படத்தில் இயக்கியுள்ளார் எஸ் ஜே சூர்யா அவர்கள்.

2.பிரண்ட்ஷிப்:

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்த படத்தில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, மதன்பாபு, சார்லி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் மூன்று நண்பர்களின் கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திலும் வில்லன்களே இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இருந்தாலும் இது மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

3.காதலுக்கு மரியாதை:

இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காதலுக்கு மரியாதை’ இந்த திரைப்படத்தில் விஜய், ஷாலினி, ராதாரவி, சிவகுமார், ராதிகா, சார்லி போன்ற பல பிரபலங்களை இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் முழுவதுமாக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின்  கதை குடும்பத்திற்காக தங்களின் காதலை தியாகம் செய்யும் இரு காதலர்கள் பற்றிய ஒரு திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.

4.துள்ளாத மனமும் துள்ளும்:

எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ இப்படத்தில் விஜய், சிம்ரன், வையாபுரி, பொன்னம்பலம் , மதன் பாப் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் நடிகை சிம்ரன் அவர்கள் ஆரம்பத்தில் விஜயை தவறாக புரிந்து கொள்வார் பிறகு கண் பார்வை இழந்து குட்டி எனும் இந்த விஜய்யை காதல் செய்வார். ஆனால் கண் பார்வை கிடைத்த பிறகு தான் தெரிந்தது ஆரம்பத்தில் தான் வெறுத்த விஜய் தான் குட்டி என்பதை உணர்ந்து இருவரும் ஒன்று சேர்வார்கள். இந்த படத்தில் வில்லன்களே இல்லாத நிலையிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

5.பூவே உனக்காக:

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் இரண்டு 1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பூவே உனக்காக’. இப்படத்தில் விஜய், சங்கீதா, முரளி போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் தனது காதலியை கரம்பிடிப்பதற்காக காதலியின் வீட்டில் வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். காமெடி கலந்த இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் அமைந்தது இந்த படத்திலும் வில்லன்களே இல்லாத நிலையில் மாபெரும் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது.

Samrin

Recent Posts

“என்னை விட்ருங்க”…. லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டதும் குழந்தை போல அழுத்த இன்ஸ்பெக்டர்…. வைரலாகும் வீடியோ….!

பெங்களூருவில் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட காவல் ஆய்வாளர் ஒருவர், ஒரு குழந்தையைப் போல அழுது ஆர்ப்பாட்டம் செய்த…

19 minutes ago

மாம்பழம் யாருக்கு?…. ராமதாஸ் எடுத்த ‘திடீர்’ அஸ்திரம்…. ஆடிப்போன அன்புமணி… பாமக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சி….!

தமிழக அரசியலில் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியில், தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ்…

23 minutes ago

“குரங்கு” என கிண்டல் செய்த கணவர்.. அடுத்த நொடியே மாடல் அழகி எடுத்த விபரீத முடிவு… ஜன்னல் வழியாகப் பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி…..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் விளையாட்டாகச் சொன்ன ஒரு வார்த்தை, இளம் பெண்ணின் உயிரைப் பறித்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

34 minutes ago

4,00,000,000,000 ரூபாய் வங்கி கடன் மோசடி.. சற்றுமுன் ED அதிரடி கைது…. பெரும் பரபரப்பு…..!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற சுமார் 40,000 கோடி ரூபாய் வங்கி மோசடி மற்றும் பணமோசடி தொடர்பாக, அந்த நிறுவனத்தின்…

39 minutes ago

ஆண்டவரையே இந்தியில் பேசச் சொன்ன எடிட்டர்… வாஜ்பாய் டயலாக்கோடு செக் வைத்த கமல்… அரங்கமே அதிர வைத்த பதில்….!

சென்னையில் நடைபெற்ற என்டிடிவி (NDTV) தமிழ் மாநாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றபோது, இந்தியில் பேச…

45 minutes ago

40 நிமிட ரகசிய சந்திப்பு… 41 கேட்ட ராகுல் காந்தி, 27-க்கு டீல் பேசிய கனிமொழி…. 2026-ல் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்கு….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு…

51 minutes ago