“வெற்றி பெற்றதும் நேரா இங்கே வாங்க!”… வேட்பாளர்களுக்கு விஜய் போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ ஆர்டர்… பரபரக்கும் அரசியல் களம்…!!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது கட்சி வேட்பாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய செயல்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. கட்சித் தொடங்கிய பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய விஜய், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் மிகவும் விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். “நாம் அனைவரும் வெற்றி பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று வேட்பாளர்களை உற்சாகப்படுத்திய அவர், தேர்தல் களம் தவெக-வுக்குச் சாதகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். முடிவுகள் வெளியான பிறகு எவ்விதப் பதற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மற்ற கட்சிகள் இழுக்க முயற்சி செய்யக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், விஜய் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்தார். “வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள், நேராகப் பனையூர் அலுவலகத்திற்கு வாருங்கள். உங்களுக்காக நான் இங்கே காத்திருப்பேன்” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார். இதன் மூலம், தனது கட்சி எம்.எல்.ஏ-க்களை ஒருமித்தக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், கட்சித் தாவல் போன்ற அரசியல் குழப்பங்களைத் தவிர்க்கவும் விஜய் இப்போதே அதிரடி வியூகத்தை வகுத்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

1 மணத்தியாலம் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

1 மணத்தியாலம் ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

1 மணத்தியாலம் ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

2 மணத்தியாலங்கள் ago

“5 பேருக்கு திமுக காசு கொடுத்துருச்சு!.. 2 பேருக்கு அதிமுக காசு கொடுத்துருச்சு”… நாளைக்கு இருக்கு பெரிய ஆப்பு… எக்சிட் போல் கணிப்புகளை ஓப்பனாக கலாய்த்த விமர்சகர்கள்…!!!

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…

2 மணத்தியாலங்கள் ago