6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததாக நினைத்த மீன் உயிருடன் மீட்பு… முடிவுக்கு வந்த 40 கோடி கால மர்மம்.. பூமி அழியும் போது இது எங்கே இருந்தது?..!!

Spread the love

இந்தோனேசியக் கடற்பகுதியில் சுமார் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘சீலாகாந்த்’ எனப்படும் அரிய வகை மீன் கண்டறியப்பட்டுள்ளது உலகெங்கிலும் உள்ள கடல்சார் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கும் முன்பே தோன்றிய இந்த மீன் இனம், சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது.

ஆனால், கடந்த 1938-ஆம் ஆண்டிற்குப் பிறகு இவை மீண்டும் ஆங்காங்கே தென்படத் தொடங்கின. தற்போது இந்தோனேசியாவின் ஆழ்கடல் பகுதியில் மீண்டும் இவை காணப்பட்டது, பரிணாம வளர்ச்சியின் மர்மங்களை அவிழ்க்க உதவும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இத்தனை கோடி ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் அடையாமல் அப்படியே இருப்பதால், இவை ‘வாழும் புதைபடிவம்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சீலாகாந்த் மீன்கள் மற்ற மீன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உடலமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் துடுப்புகள் கால்களைப் போன்ற தசை அமைப்பைக் கொண்டுள்ளதால், இவை நிலத்தில் வாழும் முதுகெலும்பிகளின் முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் ஆழ்கடலில் சுமார் 2,300 அடி ஆழத்தில் வாழும் இந்த மீன்கள், சுமார் 6 அடி நீளம் வரை வளரக்கூடியவை மற்றும் 90 கிலோ வரை எடை கொண்டவை. இவற்றின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு உயிரினம் இன்றும் கடலின் மர்மமான ஆழத்தில் வாழ்ந்து வருவது, இயற்கையின் வியக்கத்தக்க ஆற்றலையும் கடலின் ஆழத்தில் இன்னும் மனிதனுக்குத் தெரியாத பல ரகசியங்கள் புதைந்துள்ளதையும் நமக்கு உணர்த்துகிறது.

Rajeshwari

Recent Posts

கோட்டையில் க்ளைமாக்ஸ்..! ஸ்டாலின், உதயநிதி படங்கள் அகற்றம்… விஜய் வருகைக்காக தயார் செய்யப்படும் தலைமை செயலகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில்…

2 minutes ago

அதிர்ந்த தமிழக அரசியல்… ஆச்சரியப்பட்ட அஸ்வின்.. TVK-யின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இணைந்த கிரிக்கெட் உலகம்..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

4 minutes ago

“விஜய்யை குறைத்து மதிப்பிடாதீங்க” அன்றே சொன்னேன்… இன்று நடக்கிறது… விஜய் குறித்து கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட பரபரப்பு கருத்து…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தாம் ஏற்கனவே கூறியிருந்ததை கிரிஷ் சோடங்கர் மீண்டும்…

6 minutes ago

“ஸ்டாலின் தோல்வியால் வெற்றியை கொண்டாட முடியல” கூட்டணிக்கு தவெக எங்களை கூப்பிடாது… வைகோவின் பேச்சால் பரபரப்பு..!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேட்டி…

15 minutes ago

“விஜய் அலையிலும் அசையாத எடப்பாடி கோட்டை!… சேலத்தில் அதிமுக காட்டிய ‘மாஸ்… தளபதிக்குச் செக் வைத்த எடப்பாடியின் ராஜதந்திரம்”…!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 'விஜய் அலை' வீசி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியைப்…

19 minutes ago

திமுக-விற்கு அதிர்ச்சி.. விஜய்க்கு ஆதரவு… காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நிறைவேறிய ரகசியத் தீர்மானம்…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…

21 minutes ago