ரகசியமா வந்து ஸ்கெட்ச் போட்ட மகன்…! தண்ணீர்த் தொட்டியில் சடலமாகத் கிடந்த தாய்.. பகீர் பின்னணி…!

Spread the love

ஹரியானாவின் யமுனா நகர் பகுதியில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை லண்டனில் இருந்து ரகசியமாக வந்து மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோமித் ரதி எனும் இளைஞர் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததை அவரது தாய் பல்ஜீந்தர் கவுர் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சமரசம் செய்ய முயன்ற உறவினர்கள் கோமித்தை லண்டனுக்குப் படிக்க அனுப்பி வைத்தனர். ஆனால், தாயின் மீதான ஆத்திரம் குறையாத கோமித், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டு யாருக்கும் தெரியாமல் இந்தியா திரும்பினார்.

தனது வருகையை நண்பர் பங்கஜிடம் மட்டுமே பகிர்ந்துகொண்ட கோமித், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி இரவு வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் பதுங்கியிருந்தார். அங்கு வந்த தனது தாயை ஆவேசமாகத் தாக்கி கொலை செய்ததோடு, விபத்து போலக் காட்ட உடலைத் தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டுத் தப்பியோடினார். ஆரம்பத்தில் மர்ம மரணமாகக் கருதப்பட்ட இந்த வழக்கை கிரைம் பிரிவு போலீசார் கையில் எடுத்து, செல்போன் சிக்னல் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கொலையாளியைக் கண்டுபிடித்தனர். தற்போது கோமித் மற்றும் அவரது நண்பர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

“திமுக ஆட்சியா? தவெக ஆட்சியா?”… CM விஜய் போட்ட கையெழுத்தைக் கிழித்துத் தொங்கவிட்ட சீமான்… பரபரப்பு பேட்டி…!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான ஹாஜா முகைதீன்,…

4 minutes ago

“ஏணிக்கு வேலையில்லை!.. மனைவியின் தோளில் ஏறி கணவன் செய்த சேட்டை… நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வீடியோ”…!!

இணையத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, கணவன்-மனைவி இடையேயான புரிதலையும், நகைச்சுவை உணர்வையும் மிக அழகாகப் பிரதிபலிக்கிறது. பொதுவாக, குடும்பப்…

11 minutes ago

“வெறும் 40 நாட்களில் ரூ.2.4 லட்சம் கோடி காலி”… கையை மீறிய செலவால் நிலைகுலைந்த வல்லரசு அமெரிக்கா… வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம்…!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic…

14 minutes ago

“130 ஆண்டு அடிமைத்தனம்!… ஒரு அந்நியன் செய்த அதிசயம்.. 5 குடும்பங்களுக்குக் கிடைத்த மறுவாழ்வு.. நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ”…!!

பாகிஸ்தானில் வறுமை, கல்வி மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான செய்திகள் அதிகம் வெளிவந்தாலும், 130 ஆண்டுகளாகப் பிணைப்புக் கைதிகளாக (bonded…

20 minutes ago

“75-க்கு 75″… 95% நிர்வாகிகள் ஓகே! அதிமுகவை முழுமையாக லாக் செய்த எடப்பாடி… அக்ரி கிருஷ்ணமூர்த்தி உடைத்த ரகசியம்…!

அதிமுகவின் முழுக் கட்டுப்பாடும் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடமே (EPS) உள்ளது என்பதை அக்கட்சியின் மூத்த நிர்வாகி அக்ரி…

23 minutes ago

BREAKING: இனி ‘நமது அம்மா’ கிடையாது… அதிமுகவின் புதிய ‘போர்வாள்’ ரெடி… அறிமுகம் செய்தார் EPS….!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த 'நமது அம்மா' நாளிதழ் சி.வி. சண்முகத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…

28 minutes ago