தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பரப்புரையில் ஈடுபடாமல் இருந்த அவர், தற்போது மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இது குறிப்பாக கொங்கு மண்டலம், தென் தமிழகம் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ள விஜய், முதற்கட்டமாக நாளை திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சாலைப் பயணம் மேற்கொண்டு, பின் கேடிசி நகர் பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்ற உள்ளார்.
மேலும் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகளுக்கு எதிராக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக, விஜய்யின் இந்தப் புதிய வேகம் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, இனிவரும் பரப்புரைகளில் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவா கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், கடலில் பாராசெயிலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக பாராசூட்டின் கயிறு அறுந்து…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி…
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய ₹1.44 லட்சம் நிலுவைத் தொகையை அந்த நிறுவனம்…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…