உதவ மறுத்த ஊர் மக்கள்.. குளியலறையிலேயே தங்கையை எரிக்க முயன்ற அண்ணன்… விஞ்ஞானியின் மகளுக்கு நேர்ந்த கொடூர முடிவு… போலீஸாரையே அதிர வைத்த சம்பவம்..!!!

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் கோவிந்த்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ஒரு விஞ்ஞானியின் மகளான லிபிகா குமாரி என்பவர் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குறித்து அண்டை வீட்டாருக்கு லிபிகாவின் சகோதரர் பிரணவ் தகவல் அளித்தும், யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், கடந்த ஐந்து நாட்களாக லிபிகாவின் உடல் வீட்டிலேயே கிடந்துள்ளது. இறுதியில் உதவி கிடைக்காத விரக்தியில், பிரணவ் தனது வீட்டின் குளியலறையிலேயே துணிகள் மற்றும் தலையணைகளை அடுக்கி தனது சகோதரியின் உடலைத் தகனம் செய்ய முயற்சித்துள்ளார். இந்தச் செயல் காரணமாக வீட்டிலிருந்து கடும் புகையும் துர்நாற்றமும் வீசியதையடுத்து, அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், குளியலறையில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து எஞ்சிய உடல் பாகங்களைக் கைப்பற்றினர்.

மேலும் முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பம் தந்தை இறந்த பிறகு கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், லிபிகா விவாகரத்து பெற்று கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சிக்கல்களில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணின் உடல் பல நாட்களாக வீட்டிலேயே இருந்ததும், இறுதியில் குளியலறையில் எரிக்கப்பட்டதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Rajeshwari

Recent Posts

தவெக-வில் இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’ வைத்த விஜய்..? இடைத்தேர்தலில் சீட் கிடையாது என அதிரடி முடிவு..!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்க…

56 seconds ago

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

27 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

38 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

47 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

56 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

1 மணத்தியாலம் ago