அமெரிக்காவின் முற்றுகையைச் சுக்குநூறாக உடைத்த சீனக் கப்பல்… ஹார்முஸ் ஜலசந்தியில் சீனா காட்டிய மாஸ் காட்டி… பதற்றத்தில் நாடுகள்…!!!

Spread the love

அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் தடையையும் மீறி, சீனாவின் ‘ரிச் ஸ்டாரி’ என்ற சரக்குக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து சீனா நோக்கிச் சென்று கொண்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக, அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை முற்றுகையை அமல்படுத்தி, அதிநவீன ஆயுதங்களுடன் 15 போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது.

மேலும் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள இந்தத் தடைகளை சவாலாக ஏற்று, சீனா தனது கப்பலை அந்தப் பகுதி வழியாகச் செலுத்தியிருப்பது அமெரிக்காவிற்கு இராஜதந்திர ரீதியாகக் கிடைத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஷாங்காய் ஷுவான்ரூன் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ‘ரிச் ஸ்டாரி’ கப்பல், சுமார் 2,50,000 மெத்தனால் எரிபொருளைச் சுமந்து செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஈரானுடன் வர்த்தகம் செய்ததற்காக ஏற்கனவே இந்தக் கப்பல் மற்றும் அதன் உரிமையாளர் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முற்றுகையைத் தகர்த்து இந்தக் கப்பல் முன்னேறியிருப்பது சீனாவின் வலிமையை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும், ‘முரலிகிஷன்’ என்ற மற்றொரு சீனக் கப்பலும் இதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன, இது இப்பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Rajeshwari

Recent Posts

“எமர்ஜென்சிக்கே அஞ்சாத நாங்க இதுக்கா பயப்படப் போறோம்?”… தவெக-வை வறுத்தெடுத்த அமைச்சர் சேகர்பாபு….!

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…

3 minutes ago

“திமுக, அதிமுகவுக்கு வன்னி அரசு கொடுத்த மரண மாஸ் பதிலடி”…. நேரில் அழைத்து விஜய் செய்த காரியம்…. அதிர்ந்துபோன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…

9 minutes ago

“நம்ம பெப்ஸி உமாவா இது?.. இத்தனை வருசமா எங்க இருந்தாங்க?”… வைரலாகும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த 90s கிட்ஸ்…!

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…

16 minutes ago

ஒரே நாளில் ரூ.5.77 லட்சம் கோடி அவுட்… கரடியின் பிடியில் சிக்கிய இந்தியப் பங்குச்சந்தை… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… பங்குச்சந்தையை நிலைகுலைய வைத்த ‘ஏஐ’ புயல்….!

பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…

24 minutes ago

“அப்பா, அம்மா, தங்கை”…. ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூரக் கொலை… குளியலறையை கழுவிய மகள்… பெங்களூருவில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் துரோகம்….!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…

32 minutes ago

“அந்த பேரு கூட பொய் தான்..” இன்ஃப்ளூயன்சர் பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரன்… ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை… டெல்லியில் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…

39 minutes ago