“தூக்கத்தை தொலைத்த டிரம்ப்”… அமேசான் மையத்தை குறிவைத்து ஈரான் நடத்திய அதிர்ச்சி வைத்தியம்… ஈரானின் ‘ஹிட் லிஸ்ட்’ பட்டியலில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள்…!!!

Spread the love

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் உயர்மட்ட தலைவர்களை அமெரிக்கா குறிவைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான் புரட்சிகரப் படை, அதற்குப் பதிலடியாக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக, பஹ்ரைன் நாட்டின் ஹமாலா பகுதியில் அமைந்துள்ள ‘பாட்டெல்கோ’ தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமையகம் மீது ஈரான் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் அமைப்பின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை வழங்கி வரும் முக்கிய உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளதால், அமேசானின் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஈரானின் இந்தத் தாக்குதலால் பஹ்ரைனின் சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஆப்பிள், கூகுள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈரான் தனது இலக்குப் பட்டியலில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இத்தகைய தாக்குதல்கள் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் ஐடி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து, அதன் வழியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தைப் பணிய வைக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமேசான் தரவு மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தற்போதைய நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajeshwari

Recent Posts

“அடி மாட்டு ரேட்டுக்கு பேரம்..?!” – வைகோ பேட்டியால் ஆடித்தீர்ந்த தமிழக அரசியல்… விஜய்யை வாரிச்சுருட்டிய திமுக எம்.பி…!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

6 seconds ago

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

9 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

11 minutes ago

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

31 minutes ago

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

44 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

48 minutes ago