Categories: சினிமா

ரிலீஸ் ஆகாமல் தள்ளிபோய்க்கொண்டே இருக்கும் தங்கலான்.. மொத்த பிரச்சனைக்கும் காரணமான பா.ரஞ்சித்..

Spread the love

இரண்டு வருட காலமாக தங்களான் படத்தை பா. ரஞ்சித் மிகச் சிறப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே விக்ரம் அவர்களுக்கு எந்த படமும் சரியாக போகவில்லை, விமர்சனம் ரீதியாகவும் சரி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் சரி மண்ணை தான் கவியது. கிட்டத்தட்ட அவர் ஹிட் கொடுத்து 18 வருடங்கள் ஆகிவிட்டது, கடைசியாக 2005 ஆம் ஆண்டு சங்கர் நடிப்பில் வெளிவந்த அந்நியன் படத்தில் தான் மாபெரும் வெற்றியை கண்டார் சியான் விக்ரம்.

அதன் பின் எந்த படமும் இவருக்கு ஓடவில்லை, இருமுகன், ஸ்கெட்ச், கோப்ரா என்ற தோல்வி படங்களாகவே அமைந்தது. நீண்ட வருடங்கள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னின் செல்வன் படத்தில் நடித்து ஓரளவை வெற்றியை கண்டிருந்தார், ஆனால் அப்படத்தில் இவரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாரே தவிர, இவரின் முன்னணி படமாக அது அமையவில்லை. ஆனால் தற்போது பல வருடம் கழித்து ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு விக்ரம் நடித்து வரும் படம் தான் தங்களான்,

இப்படம் மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது, KGF- இல் நடந்த சம்பவத்தை தழுவி வரலாற்று படமாக எடுக்கப்பட்டு தற்போது போஸ் புரொடக்ஷனான VFX, CG போன்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார் இயக்குனர் பா ரஞ்சித். ஆனால் இப்படத்தின் ஆரம்பத்தில் கணக்கிடப்பட்ட பட்ஜெட்டை தாண்டியதால் பா ரஞ்சித் அவர்களின் சொந்த காசைப் போட்டி படம் எடுத்து முடித்து இருக்கிறார்,

ஃபர்ஸ்ட் காப்பி மூலம் முதலிலே படத்தின் பட்ஜெட்டை முடிவு செய்யப்பட்டு அக்ரீமெண்ட்  செய்த இயக்குனர், இருப்பினும் அந்த காசை தயாரிப்பாளரிடம் கேட்டபோது தயாரிப்பாளர் ஃபர்ஸ்ட் காபி அக்ரீமெண்ட் போடப்பட்டு தான் படத்தை இயக்க ஆரம்பித்தோம், அதன் பின் ஏன் பணம் தர வேண்டும் என்று இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினையாகியுள்ளது. அதனால் இப்படம் சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் கசிந்துள்ளது.

Ranjith Kumar

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago