#image_title
பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு காக்க காக்க, பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிறப்பாக நடித்தார். சித்தி, அலைகள் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
டேனியல் பாலாஜி இறப்பை அறிந்த இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் 48 வயதாகியும் நடிகர் டேனியல் பாலாஜி திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து அவரது நண்பர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அவர்கள் கூறியதாவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம். ஆன்மீகம், மக்களுக்கு சேவை செய்வது போன்றவற்றில் டேனியல் பாலாஜி ஆர்வமாக இருந்ததால் திருமணம் பற்றி அவர் அவ்வளவாக பேசியதில்லை என தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…
அஜ்மீர் ரயில் நிலையத்தில் பரேலிக்குச் செல்வதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற 39 வயதுடைய ரேஷ்மா என்ற பெண் கால்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…
கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…
காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…