பிரபல தமிழ் நடிகரான ரஜினிகாந்த், 1981 ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்று விட மகள் உள்ளனர். தற்போது ரஜினிகாந்த்தின் குடும்ப வாழ்க்கை பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ரஜினிகாந்த் மேடை ஒன்றில் கூறியதாவது ” சினிமாவிற்கு நடிக்க வந்த சில வருடங்களுக்கு பிறகு எம்.ஜி.ஆர் ஒரு முறை என்னிடம் ‘திருமணம் எப்போது செய்து கொள்ள போற’ என்று கேள்வி கேட்டார். அதற்கு நான் இன்னும் பெண் பார்க்கவில்லை என்று கூறினேன். அதற்கு அவர் நல்ல குடும்ப பெண்ணா பார்த்து திருமணம் பண்ணிக்கோங்க.
என்னிடம் முதலில் சொல்லவும் என்று கூறினார். மேலும் திருமணத்திற்கு தான் வருவதாக கூறினார். பின்பு சிறு காலம் கழித்து லதாவை நான் சந்தித்தேன், நாங்கள் இருவரும் காதலித்தோம். ஆனால் லதாவின் குடும்பத்தினர் என்னை சினிமா நடிகர் என்று கூறி பெண் கொடுக்க மறுத்தனர். பின்பு ஒரு முறை எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டார் அப்போது நான் லதாவை பற்றி கூறினேன், அவ்வாறு கூறி இரண்டாவது நாள் லதாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்பந்தம் தெரிவித்தனர்.
பின்பு தான் தெரிந்தது எம்.ஜி.ஆர். அவர்கள் தான் என்னைப் பற்றி லதாவின் வீட்டில் நல்லபடியாக சொல்லி ஒப்புக் கொள்ள வைத்தார் என்று. எனக்கு திருமணமாக மிக முக்கியமான காரணமே எம்.ஜி.ஆர். தான், மேலும் இன்றுவரை நான் சந்தோஷமாக குடும்பத்துடன் வாழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். தான்” என்று கூறினார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…