ஆசிய கோப்பை தொடரின் ஆறாவது லீக் போட்டி துபாயில் நடைபெற்றதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து ஆடிய இந்தியா 15 .5 ஓவரில் மூன்று விக்கெட்டிற்கு 131 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது.
அபிஷேக் ஷர்மா 13 பந்தில் 31 ரன்கள் குவித்தார்.திலக் வர்மா 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் சூரியகுமார் யாதவ் பொறுப்போடு விளையாடி 47 ரன்களை குவித்தார். இந்நிலையில் IND vs PAK போட்டி முடிந்த பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் கைகொடுக்க வந்த போது, இந்திய வீரர்கள் அதை புறக்கணித்தனர். போட்டி முடிந்ததும் களத்தில் இருந்த சூர்யகுமாரும், ஷிவம் துபேவும் நேராக டிரஸ்ஸிங் ரூம் சென்றனர். ஆனால் இந்திய வீரர்கள் வருவார்கள் என பாக்., வீரர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனையடுத்து Post-Match Presentation-ஐ பாகிஸ்தான் கேப்டன் புறக்கணித்தார். இதற்கு காரணம் பாகிஸ்தான் வீரர்களுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கமல் சென்றது தான் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா தெரிவித்துள்ளார்.
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'Happiest Places to Work' விருதுகள், வெறும் லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…