கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தமிழக அரசியலில் தவெக-வின் வரவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி அதிமுகவை 3-வது இடத்திற்குத் தள்ளியது. இதைத் தொடர்ந்து, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் காரணமாக 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதில் 5 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. குறிப்பாக, வன்னியர் சமுதாய வாக்குகள் அதிகமுள்ள மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், தவெக சார்பில் மரகதம் குமரவேல், நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் மற்றும் சிபிஎம் சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு வாக்குகள் சிதறும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற திமுகவும் அதிமுகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன.
இந்நிலையில், கூட்டணி தர்மத்தின்படி பாமக தங்களுக்கு ஆதரவளிக்கும் என அதிமுக எதிர்பார்த்த சூழலில், “யாருக்கும் ஆதரவு இல்லை” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். இது அதிமுக தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையான 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுக்காததும், இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நேரடியாகப் பேசாமல் இரண்டாம் கட்ட நிர்வாகிகளை விட்டுப் பேச வைத்ததும் அன்புமணி ராமதாஸின் கடும் அதிருப்திக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெறுவதற்காகப் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தியைப் பொது வேட்பாளராகக் களமிறக்கலாம் என்று அன்புமணி முன்வைத்த யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்காமல், கணிதா சம்பத்தை வேட்பாளராக அறிவித்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியாலேயே பாமக இந்தத் தேர்தலில் நடுநிலை வகிக்கும் முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. இச்சம்பவம் அதிமுக-பாமக இடையேயான விரிசலை அம்பலப்படுத்தியுள்ள நிலையில், வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவின் கூட்டணிப் பயணம் எந்தத் திசையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…
மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், கடந்த 18-ம் தேதி தூக்கிட்டுத்…