போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய நடிகர் தாமு… தேம்பி தேம்பி அழுத பெண் காவலர்… இதோ வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தாமு., ஆனால் இவர் விஜய் உடன் இணைந்து நடித்த ‘கில்லி’ திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். விக்ரம், அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்  தாமு நடிப்பில் மட்டுமல்லாது பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். குறிப்பாக கல்வித் துறையில் இவர் பல சேவைகளை செய்து வருகிறார்.

   

இவர் நடிகராக செயல்பட்ட போது ‘மாணவர் சமுதாயத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டும்’ என்று அப்துல் கலாம் இவரிடம் கூறியிருந்தார். அதற்கு ஏற்ப இவர் கல்வி சேவை செய்து வருகிறார். கல்வித்துறையில் இவர் ஆற்றிய சேவைக்கு பாராட்டு தெரிவித்து, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தேசிய கல்வியாளருக்கான கௌரவ விருதான’ ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021′ என்ற விருதை அளித்துள்ளது.

குறிப்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு உதவியாளராக இவர் செயல்பட்டுள்ளார். தற்பொழுது நடிகர் தாமு , அரியலூர் மாவட்டம், கொளத்தூர் மாவட்டத்தில் ‘போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்’ என்ற தலைப்பில் ஐ.சி.எப் அம்பேத்கர் மன்றத்தில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 6 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1200 மாணவர்களுடன் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடினார்.குறிப்பாக, போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் மிமிக்ரி மூலமாக தாமு சிறப்புரையாற்றினார்.

அவரின் பேச்சைக் கேட்ட ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கினர். குறிப்பாக அங்கு பாதுகாப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுதார். இதைப் பார்த்த தாமு உள்பட பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…