பிரபல யூடியூபரான TTF வாசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று இளைஞர்களிடையே பிரபலம் ஆனவர். நேற்று TTF வாசன் விலை உயர்ந்த தனது மோட்டார் சைக்கிளில் மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற TTF வாசன் “வீலிங்” செய்ய முயன்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து சாலையோர தடுப்பின் மீது மோதி சுக்குநூறானது. இதனால் TTF வாசன் மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
உடனே அந்த வழியாக சென்றவர்கள் TTF வாசனை மீட்டு மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கையில் எலும்பு முடிவு ஏற்பட்டது. தற்போது நண்பர் அஜீஸ் வீட்டில் ஓய்வு எடுக்கும் TTF வாசனை காண ஏராளமான ரசிகர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
TTF வாசன் விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் TTF வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
View this post on Instagram
