மீரட்டில் கணவரை விஷப் பாம்பைக் விட்டுக்கொன்ற வழக்கில் கைதாகிச் சிறையிலுள்ள தாமினி, தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் துஷாருடன் சேர்ந்து இக்கொடூரச் செயலைச் செய்த அவருக்கு, சிறை நிர்வாகம் சார்பில் கர்ப்ப பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் அதுல் என்பவரைக் காதலித்து திருமணம் செய்த தாமினி, பின்னர் தனது பள்ளி ஓட்டுநரான துஷாருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டார். கணவன் முன்பே துஷாருடன் நெருக்கமாக இருந்து அவரை மனரீதியாக வதைத்த தாமினி, இறுதியில் அதுலை முழுமையாக வழிப்பாதையிலிருந்து அகற்றத் திட்டமிட்டார்.
கொலை சம்பவத்தன்று, தாமினி தனது கணவர் அதுலுக்குக் கொடுத்த பாலில் 25 தூக்க மாத்திரைகளைக் கலந்து மயங்கச் செய்தார். அவர் சுயநினைவின்றிப் படுக்கையில் கிடந்தபோது, தாமினியும் துஷாரும் சேர்ந்து ஒரு வீரியமிக்க கட்டுவிரியன் பாம்பைப் போர்வைக்குள் விட்டனர். அந்தப் பாம்பு அதுலை பலமுறை தீண்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், கொலையை மறைப்பதற்காகத் துஷார் அந்தப் பாம்பையும், அதை எடுத்துவந்த பாம்பு பிடி வீரர்களையும் கொன்றார். பாம்பு கடித்ததால் ஆத்திரமடைந்து தாமினியே அதைத் தடியால் அடித்துக் கொன்றது போலக் காட்டுவதற்காக, செத்த பாம்பு படுக்கைக்கு அருகே போடப்பட்டு நாடகமாடப்பட்டது.
இக்கொலைக்காகத் தாமினி மிகவும் பக்காவான திட்டத்தைத் தீட்டியிருந்தார். கூகுளில் உலகின் பல்வேறு நச்சுப் பாம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, இறுதியாகக் கட்டுவிரியன் பாம்பையே தனது கணவரைக் கொல்லத் தேர்ந்தெடுத்தார். இதற்காகத் தனது காதலன் துஷார் மூலம் இரண்டு பாம்பு பிடி வீரர்களைத் தொடர்புகொண்டு, 5 லட்சம் ரூபாய் கொடுத்து அந்தப் பாம்பை வரவழைத்துள்ளார். தொழில்நுட்பத்தையும் விலங்குகளையும் தவறாகப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட இந்தச் சதித்திட்டம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…
சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…