தன்னிடம் கடிகாரம் இல்லாத சூழலில், சூரியன் மறைய இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு எளிய ‘சர்வைவல் ஹேக்’ (Survival Hack) முறையை இந்திய விமானப்படை விமானி ஒருவர் வீடியோ மூலம் விளக்கியுள்ளார். காடுகளில் அல்லது கடிகாரம் வேலை செய்யாத இக்கட்டான நேரங்களில் தப்பிப்பிழைக்க இந்த உத்தி மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறையின்படி, உங்கள் கையை நீட்டி, நான்கு விரல்களை (பெருவிரல் தவிர) கிடைமட்டமாக சூரியனுக்கும் அடிவானத்திற்கும் (Horizon) இடையே வைக்க வேண்டும். சூரியனின் கீழ் விளிம்பிற்கும் அடிவானத்திற்கும் இடையே எத்தனை விரல் இடைவெளி இருக்கிறது என்பதைக் கணக்கிட வேண்டும். இதில் ஒவ்வொரு விரலும் தோராயமாக 15 நிமிடங்களைக் குறிக்கும். உதாரணமாக, நான்கு விரல்களும் சூரியனுக்குக் கீழே சரியாகப் பொருந்தினால், சூரியன் மறைய இன்னும் ஒரு மணி நேரம் (60 நிமிடங்கள்) இருக்கிறது என்று அர்த்தம்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, ஒரு அவசரக் காலத் தற்காப்பு நுட்பமாகப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மலையேறுபவர்கள், காடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த தகவல் என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எந்தவித நவீன உபகரணங்களும் இன்றி இயற்கையை வைத்தே நேரத்தைக் கணிக்கும் இந்த பழங்கால உத்தி, தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…