கோவை குனியமுத்தூர் பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைக்காமல், கள்ளச்சாவி மூலம் திறந்து 130 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்த ஜெபா மார்டின் என்பவர் வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
புகாரின் பேரில் களமிறங்கிய காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கண்ணப்ப நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளில் 80 சவரனைப் பறிமுதல் செய்த போலீஸார், மீதமுள்ள நகைகளை மீட்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி ஒரு வாடகை கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துகொண்டே, இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து கைவரிசை காட்டி வந்துள்ளார். இவரிடம் ஏராளமான சாவிகள் அடங்கிய கொத்து இருப்பதாகவும், அதனைப் பயன்படுத்திப் பூட்டுகளை லாவகமாகத் திறப்பதில் இவர் கில்லாடி என்பதும் தெரியவந்தது.
கடந்த 1993 முதல் மும்பை மற்றும் கோவை எனப் பல இடங்களில் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாவியை உடைக்காமல் நூதன முறையில் கொள்ளையடித்து போலீஸாரையே குழப்பத்தில் ஆழ்த்திய குற்றவாளியை, சிசிடிவி ஆதாரங்கள் மூலம் குனியமுத்தூர் போலீஸார் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் விற்பனை விலையை விடக் கூடுதலாக ரூ. 10 முதல் ரூ. 20…
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது…
"அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; பணம் மற்றும் பகட்டு காட்டுபவர்களுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி அங்கீகாரம் கொடுக்கிறார்" என்று…
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம்…
மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…
டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…