நாம பாக்குறதெல்லாம் பொய்.. ஜொலிக்கும் ஐரோப்பாவுக்கு பின்னாடி இவ்வளவு அழுக்கா?” – பகீர் வீடியோ வெளியிட்ட யூடியூபரால் இணையத்தில் மோதல்..!

Spread the love

பிரபல பயண வலைப்பதிவர் பிரதீக் சிங், ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய நிலை குறித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 46 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள அவர், தற்போது ஆஸ்திரியாவில் இருந்தபடி “ஐரோப்பாவின் யதார்த்தம்” என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஐரோப்பா என்பது இன்ஸ்டாகிராமில் பார்ப்பது போல எப்போதும் அழகாக இருப்பதில்லை.

பல முக்கிய நகரங்களின் தெருக்கள் அசுத்தமாக இருப்பதாகவும், சுற்றுலாத் தலங்கள் அளவுக்கு அதிகமான கூட்டத்தால் திணறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில பகுதிகள் மிகவும் பாதுகாப்பற்றவையாகவும், பயத்தை ஏற்படுத்துபவையாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் காட்டப்படும் ஜொலிக்கும் தெருக்களுக்குப் பின்னால் பெரிய அலட்சியம் ஒளிந்திருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகள் ஐரோப்பாவை விடச் சிறந்தது எனச் சிலர் கூற, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் இன்னும் அழகாகவே இருப்பதாக வேறு சிலர் வாதிடுகின்றனர். தன்னுடைய கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரதீக், தான் இந்தியாவையும் ஐரோப்பாவையும் ஒப்பிடவில்லை என்றும், ஒரு நாட்டின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது அந்த நாட்டை இழிவுபடுத்துவது அல்ல, மாறாக உண்மையை உரக்கச் சொல்வதே தனது நோக்கம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Soundarya

Recent Posts

தைரியம் இருந்தா உதயசூரியனை விடுத்து.. தனிச்சு நின்னு ஜெயித்துக் காட்டுங்க..!ஜவாஹிருல்லாவுக்கு திமுகவினர் விடுத்த அதிரடி சவால்…!

தமிழக தேர்தல் அரசியலில் கூட்டணி கட்சிகள் பெரிய கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில்…

2 minutes ago

“ஒரு மாசத்துக்கு போன் பண்ணாதீங்க!” – அமித் ஷாவிடம் கெஞ்சிய அதிமுக பிரமுகர்… பின்னணியில் நடந்த பரபரப்பு டீலிங்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்னும் அமைதியடையாத நிலையில், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள…

5 minutes ago

விஜய்யின் ‘5 சால்வை’ ரகசியம்: அதிமுகவை அசைத்துப் பார்த்த தவெக-வின் மாஸ்டர் பிளான்… மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் உடைத்த அடுக்கடுக்கான உண்மைகள்…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போதைய அரசியல் அதிரடிகள்…

10 minutes ago

கோவை சிறுமி கொலை வழக்கில்.. சிரித்து கொண்டே பதில் அளித்தாரா அமைச்சர் கீர்த்தனா..? இணையத்தில் வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன..?

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு…

17 minutes ago

“பங்குச்சந்தை காலி?”… அடுத்து வரப்போகும் மிகப்பெரிய பொருளாதார புயல்… ‘ரிச் டாட் புவர் டாட்’ ஆசிரியர் சொன்ன ஷாக் நியூஸ்…!

உலகப் புகழ்பெற்ற 'ரிச் டாட் புவர் டாட்' (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி, நிதிச்…

17 minutes ago