அம்மா இறந்துட்டாங்க..! இறுதி சடங்கு செய்ய பணம் இல்ல… ஜிவி பிரகாஷை ஏமாற்றி பணம் பறித்த நபர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…!!

Spread the love

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழ்பவர் ஜி.வி. பிரகாஷ். இசையமைப்பாளர், நடிகர் எனச் சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர், யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாகத் தன்னால் முடிந்த பண உதவியைச் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், எக்ஸ் பக்கத்தில் இருந்து ஜி.வி. பிரகாசுக்கு உதவி கேட்டு ஒரு பதிவு வந்தது. அந்தப் பதிவில், “எங்களுக்குச் சிறுவயதிலேயே அப்பா இல்லை.

அம்மா தான் வேலைக்குச் சென்று எங்களைப் படிக்க வைத்தார். இப்போது என் அம்மாவும் இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு நடத்துவதற்குப் பணம் இல்லை; இதனால் நானும் என் தங்கையும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். அம்மாவிற்கு இறுதிச் சடங்கு செய்ய உதவி செய்யுங்கள்” என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஜி.வி. பிரகாஷ், அந்த நபரின் தொலைபேசி எண்ணைப் பெற்று 20,000 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் தான் செய்த பண உதவியின் ஆதாரத்தை இணையதளத்தில் பகிர்ந்தார். அதனைப் பார்த்துப் பலரும் அந்த நபருக்குப் பணம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், தனது அம்மா இறந்துவிட்டதாக அந்த நபர் பதிவிட்ட வீடியோ, 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதும், அந்த வீடியோ ஏற்கனவே யூடியூபில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஜி.வி. பிரகாஷ் ஏமாற்றப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் ஆதாரத்தோடு பதிவிடப்பட்டு வருகிறது. இது போன்ற மோசடி நபர்களால், உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

4 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

4 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

7 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

7 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

7 மணத்தியாலங்கள் ago