நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திரைக்குப் பின்னால் நடந்த பரபரப்பான அரசியல் நகர்வுகள் குறித்த உண்மைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களையும், திமுக 74 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றின. ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரினார். கம்யூனிஸ்ட் தவிர்த்த மற்ற தோழமைக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் தவெக இடமளிக்க, தமிழகத்தில் புதிய கூட்டணி ஆட்சி மலர்ந்தது.
இருப்பினும், விஜய் முதலமைச்சர் ஆவதைத் தடுப்பதற்காக திமுக மற்றும் அதிமுக தரப்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகப் பரவிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சியைப் பிடிக்க முயன்றதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி.சண்முகமே செய்தியாளர்களிடம் ஓப்பீட்டிருந்தார். அதேபோல, தன்னை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக விசிக தலைவர் தொல். திருமாவளவனும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலின் பின்னணியை தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னைத் தொடர்புகொண்டு, “எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சர்” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு தாம், “பாஜகவின் மறைமுக ஆட்சியை எங்களால் எப்படி அனுமதிக்க முடியும்?” என்று மறுப்பு தெரிவித்ததாகவும், மறுநாளே ஸ்டாலின் மீண்டும் அழைத்து “திருமாவளவன் முதலமைச்சர்” என்று கூறியதாகவும் உடைத்துப் பேசியுள்ளார். காதர் மொய்தீனின் இந்த அதிரடி வாக்குமூலம், தவெக தலைவர் விஜய் ஆட்சிக் கட்டிலில் ஏறுவதைத் தடுக்க, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க திமுக தீவிரமாக முயன்றதை உறுதிப்படுத்தியுள்ளது.
மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…
மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…
திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…