பெங்களூரு – விஜயவாடா இடையேயான பொருளாதார வழித்தட கட்டுமானப் பணியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரே வாரத்தில் நான்கு கின்னஸ் உலக சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி 6-ம் தேதி 24 மணி நேரத்திற்குள் சுமார் 29 கி.மீ தூரத்திற்குத் தார்ச் சாலை அமைத்தும், 10,655 மெட்ரிக் டன் தார் கலவையைப் பயன்படுத்தியும் முதல் இரண்டு சாதனைகள் எட்டப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 11-ம் தேதி 156 லேன் கி.மீ தூரத்திற்குச் சாலை அமைத்தது மற்றும் 57,500 மெட்ரிக் டன் தாரைப் பயன்படுத்தியது என அடுத்தடுத்த சாதனைகளை இந்தியப் பொறியாளர்கள் படைத்து உலகையே வியக்க வைத்துள்ளனர்.
சுமார் 343 கி.மீ நீளம் கொண்ட இந்த ஆறு வழிச் சாலைத் திட்டம் முழுமையடையும் போது, பெங்களூரு – விஜயவாடா இடையிலான பயண தூரம் 100 கி.மீ வரை குறையும். இதன் மூலம் 12 மணி நேரப் பயணம் வெறும் 6 முதல் 8 மணி நேரமாகப் பாதியாகக் குறையும் என்பதால் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துப் பெரும் வளர்ச்சியடையும்.
சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் எனப் பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாகும் இந்தச் சாலை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வலிமையை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. இந்த இமாலய வெற்றியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…