ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புதிய ராணுவ ஆலோசகர் மொஹ்சின் ரெசாய் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் எரிசக்தி அல்லது அடிப்படை உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்கு ஈடாக “கண்ணுக்குக் கண்” என்ற முறையைத் தாண்டி, “கண்ணுக்குத் தலை” என்ற ரீதியில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வளைகுடா பகுதியில் அமெரிக்கக் கப்பல்களை மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவை முழுமையாக முடக்கி விடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மறுபுறம், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு ‘முழுமையான தீர்வு’ காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அவர் பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை செய்திகளை ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மறுத்துள்ளார். சந்தைகளைக் கையாளுவதற்காக அமெரிக்கா பரப்பும் “போலிச் செய்தி” இதுவென்று அவர் விமர்சித்துள்ளார். எனினும், ஈரானின் உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா காமேனி ரகசியமாகப் பேச்சுவார்த்தைக்கு அனுமதி அளித்துள்ளதாகச் சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…