2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். இதில் “பாதுகாப்பான தமிழகம் – வியக்கத்தக்க வளர்ச்சி” என்ற முழக்கத்துடன் மொத்தம் 297 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்குவதோடு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2.22 கோடி குடும்பங்களுக்கும் இலவசமாக ஒரு குளிர்சாதனப் பெட்டி (Refrigerator) வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவோம் என்ற முக்கியமான வாக்குறுதி கல்வித் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பச் சுமையைக் குறைக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை மட்டும் சிறப்பு உதவியாக ரூ.10,000 வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கு வழங்கப்படும் இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்படும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும், விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைத்தல் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளித்துள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…