குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வசாத் இரயில் நிலையப் பகுதியில், நள்ளிரவில் தனது பெற்றோருடன் டிக்கெட் கவுண்டர் அருகே தூங்கிக் கொண்டிருந்த 4 வயது பச்சிளம் பெண் குழந்தையை சுரேஷ் பர்மார் என்ற காமுகன் கடத்திச் சென்றுள்ளான். அந்தப் பிஞ்சு குழந்தையைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த அவன், பின்னர் இரக்கமில்லாமல் இரயில் தண்டவாளத்தில் வீசி எறிந்துள்ளான்.
அந்த நள்ளிரவு நேரத்தில் தண்டவாளத்தைக் கடந்து சென்ற இரயில் சக்கரத்தில் சிக்கி அந்தச் சிறுமி உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தாள். இக்கோரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் துணைக் கொண்டு தீவிரமாகத் தேடி, சில மணி நேரங்களிலேயே காமுகன் சுரேஷ் பர்மாரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளியைக் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது, தனக்கு வாந்தி வருவது போல் நடித்து வண்டியைச் சாலையோரம் நிறுத்துமாறு அவன் போலீசாரிடம் கெஞ்சியுள்ளான். வாகனத்தை நிறுத்திய அடுத்த கணமே, தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து அங்கிருந்த காவலர்களை நோக்கிச் சரமாரியாகக் குத்தித் தப்பியோட முயன்றுள்ளான்.
இந்தத் திடீர் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்த காவல் அதிகாரி ராணா குற்றவாளியை எச்சரித்தும் அவன் தொடர்ந்து ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளான். இதனால் வேறு வழியின்றித் தங்களது தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய அதிரடித் துப்பாக்கிச் சூட்டில், அந்தப் பாலியல் கொலையாளி சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…