ரூட் மாறும் நாதக படைகள்… விஜய்யைத் தடுக்க சீமான் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. வேட்பாளர்களுக்குப் பறந்த பரபரப்பு உத்தரவு..!!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்விதக் கூட்டணியும் இன்றி 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதில் உறுதியாக உள்ள சீமான், அதற்கான பணிகளைத் தற்போது முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இன்று (பிப்.07) சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் தேர்தல் பரப்புரைக்கான வியூகங்கள், வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை மையப்படுத்தி எவ்வாறு பரப்புரை செய்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆலோசனையின் போது, திமுக அரசின் மீதுள்ள அதிருப்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதையே முதன்மை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று சீமான் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாதவை எவை, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழலில் நிலவும் போதாமைகள் குறித்துப் புள்ளிவிவரங்களுடன் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேட்பாளர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், ஒரு மாற்றாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாம் தமிழர் கட்சி திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களத்தில் குதித்துள்ளதால், நாதக-வின் வாக்கு வங்கியான இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அந்தப் பக்கம் சாய்ந்துவிடாமல் தடுப்பதில் சீமான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். விஜய்யின் அரசியல் வருகை ஒரு தற்காலிகமான ஈர்ப்பு மட்டுமே என்பதையும், நாம் தமிழர் கட்சியின் கடந்த 15 ஆண்டுகாலத் தொடர் போராட்டங்களையும் கொள்கைகளையும் இளைஞர்களிடம் ஆழமாகப் பதிய வைக்க முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மூலம் தங்களின் கொள்கைப் பரப்புரையை மேலும் தீவிரப்படுத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

8 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

13 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

23 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

30 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

44 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

46 minutes ago